under review

தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 23:28, 14 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories. தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை ( ) தமிழில் எழுதிய தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். சைவசித்தாந்தக் கருத்துக்களை நாவலில் புகுத்தி எழுதியவர். கமலாக்ஷி என்னும் அவருடைய முதல் நாவல் 1903ல் வெளிவந்தது.

பிறப்பு,கல்வி,வாழ்க்கை

தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை திரிசிரபுரம் தன் சொந்த ஊர் என்று குறிப்பிடுகிறார்.இரங்கூனில் பிரிட்டிஷ் அரசுக்காக பணிபுரிந்திருக்கிறார். இவர் நாவலில் வரும் சாற்றுகவியில் இருந்து இவர் ரங்கூனில் சுஜனரஞ்சனி சபா, சுகிர்த நாடக சபா போன்ற அமைப்புக்களை உருவாக்கி நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறர் என்று தெரிகிறது.

இலக்கிய இடம்

தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளையின் நாவல்கள் விவரணைகள் குறைவாக, நாடகம்போல உரையாடல்கள் வழியாகவே முன்னகர்பவை.தன் ஒவ்வொரு நாவலின் பத்தொன்பதாம் அத்தியாயத்திலும் ஒரு பிரசங்கியாரைக்கொண்டு நீண்ட சைவசித்தாந்தச் சொற்பொழிவை நிகழ்த்துவது இவருடைய வழக்கம். 1900களில் ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை போன்றவர்களின் முயற்சியால் சைவம் மறுமலர்ச்சி அடைந்தபோது அதில் பங்குபெற்றவர் என்று தி.ம.பொன்னுச்சாமி பிள்ளையைச் சொல்லமுடியும்.

நூல்கள்

நாவல்கள்
  • கமலாக்ஷி
  • ஞானாம்பிகை
  • சிவஞானம்
  • விஜயசுந்தரம்
  • ஞானசம்பந்தம்
  • ஞானப்பிரகாசம்

உசாத்துணை