being created

தம்பி சீனிவாசன்

From Tamil Wiki
தம்பி சீனிவாசன்

தம்பி சீனிவாசன் (ஜூலை 15, 1930) தமிழில் எழுதிய சிறார் எழுத்தாளர், சிறார் இலக்கியச் செயற்பாட்டாளர். நாடகம், கதைகள், பாடல்கள் என பல சிறார் இலக்கியங்கள் எழுதினார். குழந்தை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பி சீனிவாசன் தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தில் குடியாத்தம் என்ற ஊரில் ஜூலை 15, 1930-ல் பிறந்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளராகச் சென்னையில் பணியாற்றினார். புத்தகத்துறை பதிப்பாளராக இருந்தார்.
  • குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராகவும் பின்னர் துணைத்தலைவராகவும் இருந்தார்.

இதழியல்

தம்பி சீனிவாசன் குழந்தை எழுத்தாளார் சங்க மலரில் பங்களிப்பாற்றினார். பாரதி என்ற இதழை சிறிது காலம் தொடங்கி நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

தம்பி சீனிவாசன் அழ வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர். சிறார் இலக்கியங்கள் எழுதினார். சிறார் இலக்கியங்கள் மொழிபெயர்ப்புகள் செய்தார். இவரின் சிவப்பு ரோஜாப்பூ என்ற பாடல் தொகுதியை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். குழந்தை இலக்கியம் குறித்து யுனெஸ்கோ கருத்தரங்கில் பங்களிப்பாற்றினார்.

விருதுகள்

  • தங்கக் குழந்தைகள் என்ற சிறார் நாடகம் நூலுக்காக மத்திய அரசின் விருது.

நூல் பட்டியல்

சிறார் இலக்கியம்
  • தங்கக் குழந்தைகள் (நாடகம்)
  • சிவப்பு ரோஜாப்பூ (பாடல் தொகுப்பு)
  • பத்திரிக்கையின் கதை
  • யானையில் பறந்தவன்
  • எட்டுத்திக்குக் கதைகள்
  • பயத்தை வென்ற ராமன்
  • உங்கள் உணவும் நீங்களும்
  • எவரெஸ்ட் எனது உச்சி யாத்திரை
  • தேடிப்பார்
  • யார் கெட்டிக்காரர்?
  • பெண் படிப்பறிவு பெற்று விட்டால்
மொழிபெயர்ப்பு
  • குட்டி யானை பட்டு (நேஷனல் புக் டிரஸ்ட்)
  • யார் கெட்டிக்காரர் (நேஷனல் புக் டிரஸ்ட்)
  • ஜானுவும் நதியும் (நேஷனல் புக் டிரஸ்ட்)

உசாத்துணை

  • குழந்தை இலக்கிய முன்னோடிகள்: ஆர்.வி.பதி
  • டைப் ரைட்டரை சீராகப் பெற்றவர் - பிப்ரவரி 1, 1998 - கல்கி
  • gokulam_tamil magazine 1988-09-01 - archive



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.