under review

திருவேங்கடையர்

From Tamil Wiki
Revision as of 11:15, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)

திருவேங்கடையர் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவேங்கடையர் வில்லிபுத்தூரில் பிறந்த பிராமணர்.

இலக்கிய வாழ்க்கை

திருவேங்கடையர் பெண்களின் அவய அலங்கார வர்ணனைகளின் பேரில் உவமான சங்கிரகம் என்னும் சிறு நூலைப் பாடினார். வர்ணனைப் பாக்கள் பாடுவார்க்கு இது உபயோகமானது. உவமான சங்கிரகம், 'ரத்தினச் சுருக்கம்' ஆகிய இரண்டையும் ஆறுமுக நாவலர் சென்னை கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் 1866-ல் பதிப்பித்தார். இவருடைய உவமான சங்கிரகப் பதிப்பில் காப்பு நீங்கலாகப் பதினைந்து வெண்பாக்கள் உள்ளன. உவமான சங்கிரகத்திற்குக் காஞ்சிபுரம் இராம யோகிகள் இயற்றிய உரை 1914-ல் வெளிவந்தது.

ஆறுமுக நாவலர் பதிப்பித்த திருவேங்கடைய்யரின் சங்கிரகம் நீங்கலாக வேறு இரு உவமான சங்கிரகங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சே.ரா. சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பட்டுச் செந்தமிழ் இதழின் பதினான்காம் தொகுதியிலும் 1914-ல் தனிநூலாகவும் வெளிவந்தது. இதனுள் காப்பு நீங்கலாக 36 பாடல்கள் உள்ளன. மற்றது கொங்குநாட்டுப் புலவர் ஒருவர் ஆசிரிய விருத்தத்தால் பாடியது என்பர்.

விவாதம்

உவமான சங்கிரகத்தின் ஆசிரியர் 'திருமேனி குருகை இரத்தின கவிராயர்' எனச் சடகோபராமாநுசாசார்யர் செந்தமிழ் பதினான்காம் தொகுதியில் தமக்குக் கிடைத்த ஏட்டுப் பிரதியின் பதினேழாம் செய்யுளாகக் காணப்பட்ட நூலாசிரியரைக் குறிப்பிடும் பாடலின் அடிப்படையில் சொல்வது ஆய்விற்குரியது.

நூல் பட்டியல்

  • உவமான சங்கிரகம்

உசாத்துணை


✅Finalised Page