under review

காழி அந்தாதி

From Tamil Wiki
Revision as of 19:46, 8 August 2023 by Logamadevi (talk | contribs)
தமிழ் இணைய கல்விக்கழகம்

காழி அந்தாதி (காழியந்தாதி) சீர்காழி எனும் சிவத்தலத்தையும் அங்கு கோவில் கொண்ட ஈசனையும் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

காழியந்தாதியை இயற்றியவர் சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711 - 1779). கர்நாடக சங்கீதத்தின் ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ராமநாடகக் கீர்த்தனையை இயற்றியவர்.

நூல் அமைப்பு

காழியந்தாதி சீர்காழி என்ற சிவத்தலத்தையும், அங்கு கோவில் கொண்ட சட்டைநாதரையும் (பிரமபுரீஸ்வரர்), பெரியநாயகியையும் பாடிய நூல். நூறு பாடல்களுடன் அந்தாதித் தொடையாக அமைந்தது. சிவபெருமானின் பல திருவிளையாடல்களும், சிறப்புகளையும் பாடி, தன் வினை தீர்த்து காத்தருள வேண்டிப் பாடுகிறார் அருணாசலக் கவிராயர்.

பாடல் நடை

இனியொரு பிறவி வேண்டேன்

பிறைக்கண் ணனைமலர்ப் பூங்கோடு பாயப் பெருகமுத
நறைக்கண் ணனைவயற் பாய்காழி நாயக நான்சமனங்
கறைக்கண் ணனையினிக் காணாதுன் சேவடி காணமண்மேன்
முறைக்கண் ணனைமுலை யுண்ணா தருளுண்ண முன்னுகவே. 8

இருவினைக்கென் செய்வேன்?

முன்னந் தியான நிறத்தானை மூவர்க்கு முன்னவனை
நன்னந் தியான முகைத்தானைக் காழியி னாயகனைச்
சொன்னந் தியான மருஞ்சுதை நேர்கவி சொல்லிநெஞ்சே
யின்னந் தியானமுஞ் செய்யே மிருவினைக் கென்செய்வமே. 9

உசாத்துணை

காழி அந்தாதி, சென்னை நூலகம்


✅Finalised Page