குங்குமம் (மகளிர் இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:56, 12 June 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குங்குமம் மகளிர் இதழ்

குங்குமம் (1948), மகளிருக்காக வெளிவந்த மாத இதழ். இதன் ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எஸ். விசாலாக்ஷி.

வெளியீடு

மங்கை உள்ளிட்ட இதழ்கள் சில மகளிருக்காக வெளிவந்து வரவேற்புப் பெற்றதைத் தொடர்ந்து எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான எஸ். விசாலாக்ஷியை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராகக் கொண்டு, நவம்பர், 1948-ல் தொடங்கப்பட்ட மகளிர் மாத இதழ் குங்குமம். டி.வி. ராம்நாத்தின் ராம்நாத் அச்சகத்தில் இதழ் அச்சடிக்கப்பட்டது.