விரிச்சியூர் நன்னாகனார்

From Tamil Wiki
Revision as of 12:19, 14 April 2024 by Ramya (talk | contribs) (Created page with "விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய படல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == விரிச்சியூர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய படல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விரிச்சியூரில் பிறந்தார். நன்னாகனார் என்பது பெயர். அது சொல்லும் செய்தி

வீரன் ஒருவனுக்கும் நறவத்தை அரசன் ஊற்ற வந்தான். அப்போது அரசன் அவனை இன்ன நாளில் போருக்குச் செல்லவேண்டும் என முறை வமுத்துக் கொடுத்தான். அந்த முறைநாள் அவனுக்குப் பிடிக்கவிலை. அன்றே போருக்குச் செல்ல விரும்பினான். அதனால் அரசன் தந்த நறவத்தை வாங்க மறுத்துவிட்டான். எண்ணியது போலவே அன்றே போருக்குச் சென்று பகைவர் படையை முறியடித்தான்.

இலக்கிய வாழ்க்கை

விரிச்சியூர் நன்னாகனாரின் பாடல் ஒன்று புறநானூற்றில் 292வது பாடலாக அமைந்துள்ளது. வஞ்சித்திணைப்பாடல். பெருஞ்சோற்றுநிலை துறையைச் சேர்ந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • வேந்தர்க்கு வழங்கும் இனிய குளுமையான நறவக்கள்ளை உரிய முறையில் கலக்கி வரிசையாக வழங்குவர்.

பாடல் நடை

  • புறநானூறு: 292 (திணை-வஞ்சி, துறை-பெருஞ்சோற்றுநிலை)

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென் என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்,
என்முறை வருக என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

உசாத்துணை

  • விரிச்சியூர் நன்னாகனார்: tamilvu