புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி (1972) ப. சிங்காரம் எழுதிய நாவல். கடல்தாண்டிய தமிழர்களின் புலப்பெயர்ச்சியினை வரைகாட்டும் இந்நாவல் தமிழரின் பண்பாட்டை பின்னோக்கிப் பார்க்கும் விமர்சனக்கூறுதலையும் கொண்டுள்ளது. தொடர்ச்சியறு எழுத்தின் உதாரணமாகவும், உயர்தர அங்கதம் கொண்ட படைப்பாகவும் மதிப்பிடப்படும் இந்நாவல் தமிழ்நாவல்களில் ஒரு சாதனை என கருதப்படுகிறது
எழுத்து, வெளியீடு
ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி நாவலை 1950க்கு முன்னரே எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் 1950ல் எழுதி கலைமகள் நாவல் போட்டியில் பரிசு பெற்று 1959ல் கலைமகள் காரியாலய வெளியீடாக வந்த கடலுக்கு அப்பால் நாவல் புயலிலே ஒரு தோணி கதையின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது. 1962ல்தான் புயலிலே ஒரு தோணியை எழுதி முடித்ததாக ப.சிங்காரம் குறிப்பிட்டார். இந்நாவலை வெளியிட பலவாறாக அவர் முயன்றாலும் அன்றைய பதிப்புச்சூழலில் இது ஏற்கப்படவில்லை. இதழாளரும் எழுத்தாளருமான மலர்மன்னன் முயற்சியால் 1972ல் கலைஞன் பதிப்பகம் அதை வெளியிட்டதாகச் சி.மோகன் குறிப்பிடுகிறார். கலைஞன் பதிப்பகம் நாவலை வெட்டிச் சுருக்கியதாக சொல்லப்பட்டாலும் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி அதை மறுத்துள்ளார். அடுத்த பதிப்புகளில் சற்று மேம்படுத்தி அளிக்க ப.சிங்காரம் எண்ணினாலும் அவர் உள்ளம் அதிலிருந்து விலகிவிட்டிருந்தது.
மறுவருகை
புயலிலே ஒரு தோணி அன்றைய இலக்கிய வாசகர்களாலும் விமர்சகர்களாலும் ஏற்கப்படவில்லை. க.நா.சுப்ரமணியம் அதை ஒரு தன்வரலாறு மட்டுமாக பார்த்தார். சுந்தர ராமசாமி, பிரமிள் ஆகியோர் அதை வடிவ ஒருமையற்ற நாவல் என்றும், இரண்டாம்பகுதி தட்டையான சாகசப்படைப்பு என்றும் மதிப்பிட்டனர். 1972 க்குப்பின் இந்நாவல் நெடுங்காலம் மறுபதிப்பு வரவில்லை. 1987ல் விமர்சகர் சி.மோகன். இந்நாவலை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.