under review

திருப்பாற்கடனாதன்

From Tamil Wiki
Revision as of 06:45, 13 November 2023 by Tamizhkalai (talk | contribs)

திருப்பாற்கடனாதன் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருப்பாற்கடனாதன் திருநெல்வேலியில் பிறந்தார். அம்பலவாணக் கவிராயரின் மாணவர். திருப்பாற்கடனாதனச இரேனியஸ் (Rev. Mr. Rhenius) என்னும் கிறிஸ்தவ மதபோதகருக்கு பதினான்கு வருடம் ஆசிரியராய் இருந்தார். இரட்சணிய யாத்திரிகம் பாடிய ஹெச்.ஏ. கிருஷ்ணபிள்ளையும் இவரின் மாணவர்.

இலக்கிய வாழ்க்கை

இரேணியஸ் காலஞ்சென்றபோது திருப்பாற்கடனாதன் சில விருத்தங்கள் பாடினார். வேறு நூல்கள் கிடைக்கவில்லை. திருப்பாற்கடனாதன் தம் நண்பர் உறையூர் முத்துவீர உபாத்தியாயர் இயற்றிய முத்துவீரியம் எனும் இலக்கண நூலுக்கு உரை எழுதினார். அந்நூலுக்கு இரு சிறப்புப்பாயிரங்களும் பாடினார்.

பாடல் நடை

  • விருத்தம்

சரணமென் றடைந்தோர் தங்களுக் கிரங்கித்
தமனிய மீந்துமூ வகையாம்
கரணமென் பவையாற் றீங்குரு வண்ணங்
காசினி தன்னிலா தித்தன்
கிரணம்போ லறிவைப் பரப்பிய விரேனி
யூசெனுங் குரவனைச் சார்ந்த
மரணமே நினக்கு மரணம்வந் துருதேல்
மனத்துய ரருதுநல் லோர்க்கே

உசாத்துணை


✅Finalised Page