under review

மெய்கண்ட சாத்திரங்கள்

From Tamil Wiki
Revision as of 07:54, 17 October 2023 by Jayashree (talk | contribs)

மெய்கண்ட சாத்திரங்கள் (பொ.யு. 12-14ஆம் நூற்றாண்டு) சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள்.

தோற்றம்

பொ.யு. 12 முதல் 14-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சைவ சித்தாந்தத்தை விளக்க நூல்கள் எழுதப்பட்டன. இதில் மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் முதன்மையாகக் கருதப்பட்டது. இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் 14 சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்கள் எழுதப்பட்டன. சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி எழுதியதால் இவை மெய்கண்ட சாத்திரங்கள் என்றழைக்கப்பட்டன.

14 சாத்திரங்களையும் நினைவூட்டும் வெண்பா

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று

நூல்கள்

  • திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்)
  • திருக்களிற்றுப்படியார் (திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்)
  • சிவஞானபோதம் (மெய்கண்ட தேவநாயனார்)
  • சிவஞான சித்தியார் (திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்)
  • இருபா இருபஃது (திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்)
  • உண்மை விளக்கம் (திருவதிகை மனவாசகங்கடந்தார்)
  • சிவப்பிரகாசம் (உமாபதி சிவாசாரியார்)
  • திருவருட்பயன் (உமாபதி சிவாசாரியார்)
  • வினாவெண்பா (உமாபதி சிவாசாரியார்)
  • போற்றிப்பஃறொடை (உமாபதி சிவாசாரியார்)
  • உண்மைநெறி விளக்கம் (உமாபதி சிவாசாரியார்)
  • கொடிப்பாட்டு (உமாபதி சிவாசாரியார்)
  • நெஞ்சுவிடுதூது (உமாபதிசிவாசாரியார்)
  • சங்கற்ப நிராகரணம் (உமாபதிசிவாசாரியார்)

உசாத்துணை


✅Finalised Page