second review completed

இலக்கியா நடராஜன்

From Tamil Wiki
Revision as of 21:19, 3 February 2024 by Tamizhkalai (talk | contribs)
இலக்கியா நடராஜன்

இலக்கியா நடராஜன் (பிறப்பு: ஜூலை 29, 1958) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர், அரசியல்வாதி. கவிதைகள், சிறுகதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலக்கியா நடராஜன் ஜூலை 29, 1958-இல் சிவகங்கையில் பிறந்தார். சிவகங்கை ராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். ப.சிதம்பரத்தின் உதவியாளராக இருந்தார். 2021 முதல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக உள்ளார்.

இதழியல்

இலக்கியா நடராஜன் அன்னம் அகரம் பதிப்பகத்தில் பணியாற்றினார். 1985 முதல் 1999 வரை ‘இதயம் பேசுகிறது’ இதழின் ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கியா நடராஜன் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். 'மயானக்கரை ஜன்னல்கள்' என்ற சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். 'பெயர் தெரியாத பறவை என்றாலும், சிறகுகளால் நடப்பவன்', 'நீ..நான்.. நட்சத்திரங்கள்' போன்ற கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டார். இலக்கியா நடராஜனின் ஆதர்ச கவிஞர்கள் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், மு. கருணாநிதி.

விருது

  • 2024-இல் பபாசி கவிதை இலக்கிய விருது

நூல்பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • பெயர் தெரியாத பறவை என்றாலும்
  • சிறகுகளால் நடப்பவன்
  • நீ..நான்.. நட்சத்திரங்கள்
சிறுகதைத்தொகுப்பு
  • மயானக்கரை ஜன்னல்கள்

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.