under review

கமலாதாஸ்

From Tamil Wiki
Revision as of 09:23, 22 July 2023 by Logamadevi (talk | contribs)
கமலாதாஸ் (மாதவிக்குட்டி)
கமலாதாஸ்
கமலாதாஸ்

கமலாதாஸ் (கமலா சுரையா) (மாதவிக்குட்டி) (மார்ச் 31, 1934 - மே 31, 2009) கவிஞர், எழுத்தாளர். ஆங்கிலம், மலையாளத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். கமலாதாஸின் 'என்கதை' என்ற சுயசரிதை நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான படைப்பு.

பிறப்பு, கல்வி

கமலாதாஸ் கேரளமாநிலம் மலபாரில் புன்னயூர்க்குளத்தில் வி.எம்.நாயர், நலபட் பாலாமணி அம்மா இணையருக்கு மகளாக மார்ச் 31, 1934-ல் பிறந்தார். தந்தை மாத்ருபூமி மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர். தாயார் மலையாள கவிஞர்.

தனிவாழ்க்கை

கமலாதாஸ் பதினைந்து வயதில் மாதவ்தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் எம்.டி.நலபட், சின்னேன் தாஸ், ஜெயசூர்யா தாஸ். எம்.டி.நலபட் எழுத்தளர், பத்திரிகை ஆசிரியர். மாதவ்தாஸ் 1993-ல் காலமானார். கமலாதாஸ் கேரள சாகித்ய அகாதெமியின் துணைத் தலைவர் பதவி வகித்தார்.

கமலாதாஸ்

ஆன்மிகம்

கமலாதாஸ் 1999-ல் இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலாசுரையா என்று மாற்றிக்கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

கமலாதாஸ் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய லோக் சேவா பார்டி என்ற கட்சியைத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

கமலாதாஸ்

இலக்கிய வாழ்க்கை

கமலாதாஸ் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதினார். இவரின் முதல் கவிதை 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965-ல் வெளியானது. 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967-ல் வெளிவந்தது. இது பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றது. மலையாளத்தில் ’என் கதா’ (My Story) என்ற நூலை எழுதினார். இந்தப் புத்தகம் தமிழில் 'என் கதை' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.

இலக்கிய இடம்

”காந்திய விழுமியங்களுக்கு வெளியே இருக்கும் அவர் வாழ்க்கை, சொந்த உடலை ஒரு நாட்டிய அரங்காக , இன்பத்தின் பிறப்பிடமாக ஆக்குவது- இந்த இரண்டு அடுக்குகளுக்கும் அப்பால் அவரது சுயசரிதை மூன்றாவது அடுக்கு நோக்கி நகர்கிறது. ஆன்மா சார்ந்தது என்றோ, உடல் சார்ந்தது என்றோ, கவிதை சார்ந்தது என்றோ சொல்லத்தக்க அந்த மூன்றாவது அடுக்கை நோக்கி அவரது சுயசரிதை உயர்கிறது.” என விமர்சகர் கே.சி. நாராயணன் கமலாதாஸின் 'என்கதை' நூலை மதிப்பிடுகிறார்.

திரைப்படம்

கமலாதாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இயக்குனர் கமல் மலையாளத்தில் 'ஆமி' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

விருதுகள்

  • 1963-ல் பென் ஏசியன் பொயட்ரி விருது
  • 1968-ல் கேரளா சாகித்ய அகடாமி விருது – தனுப்பு
  • 1984-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யபட்டது
  • 1985-ல் சாகித்ய அகாடமி விருது
  • 1988-ல் கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது
  • 1997-ல் வயலார் விருது
  • 2006-ல் கோழிக்கோடு பல்கலைகழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம்
  • 2006-ல் முட்டதே வர்கே விருது
  • 2009-ல் எழுதச்சன் விருது

மறைவு

கமலாதாஸ் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மே 31, 2009-ல் காலமானார். இவரின் உடல் திருவனந்தபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

எழுதிய நூல்கள்

ஆங்கிலம்

கவிதை தொகுப்பு
  • தி சைரேன்ஸ் (1964)
  • சம்மர் இன் கல்கட்டா (1965)
  • தி டிசண்டன்ஸ் (1967)
  • தி ஓல்ட் ப்ளேஹவுஸ் அண்ட் அதர்ஸ் போயம்ஸ் (1973)
  • தி ஸ்ட்ரேஞர் டைம் (1977)
  • டுநைட், திஸ் சாவேஜ் ரைட் (1979)
  • கலெக்டட் போயம்ஸ் (1984)
  • தி அண்ணாமலை போயம்ஸ் (1985)
  • ஒஒன்லி தி சோல் நௌஸ் ஹவ் டோ சிங் (1997)
  • மை மதர் அட் சிக்ஸிடி சிக்ஸ் (1999)
  • யா அல்லாஹ் (2001)
நாவல்
  • ஆல்பபெட் ஆஃப் லஸ்ட் (1976)
சிறுகதைத்தொகுப்பு
  • ஏ டால் ஃபார் தி சைல்ட் ப்ராஸ்டிடியு (1977)
  • பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி (1992)
சுயசரிதை
  • என் கதை (1976)

மலையாளம்

நாவல்
  • வருசங்களுக்கு முன்பு (1989)
  • பலயன் (1990)
  • நிர்மாதளம் பூத்தகாலம் (1994)
  • சந்தன மரங்கள் (2005)
  • வண்டிகலக்கல் (2005)
சிறுகதைத்தொகுப்பு
  • பக்ஷியுடைய மனம் (1964)
  • தனுப்பு (1968)
  • நெநெய் பாயசம் (1991)
குறுநாவல்
  • கடல் மயூரம் (1996)
  • ரோகினி (1996)
  • அட்டுகட்டில் (1996)
  • நஷ்டபட்ட நீலாம்பரி (1998)
பிற
  • என் கத (சுயசரிதை) (1982)
  • பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக் கால நினைவுகள்) (1987)

இணைப்புகள்



✅Finalised Page