பரதநாட்டிய சாஸ்திரம் (நூல்)

From Tamil Wiki
Revision as of 08:31, 17 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பரதநாட்டிய சாஸ்திரம் (2001), வடமொழியில் பரத முனிவரால் எழுதப்பட்ட பரத நாட்டிய சாஸ்திர நூலின் மொழிபெயர்ப்பாகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர், எஸ்.என். ஸ்ரீராமதேசிகன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை வெளியிட்டது. நாட்டிய சாஸ்திரம் தோன்றிய வரலாறு தொடங்கி, நாட்டிய இலக்கணம், பயிற்றுவிக்கும் முறைகள், அதன் நுட்பங்கள் இசை, பண், தாளம், தாள ஜதிகள், பாத்திரங்கள் என அனைத்தும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.