first review completed

மயிலாப்பூர் கெளரி அம்மாள்

From Tamil Wiki
மயிலாப்பூர் கெளரி அம்மாள்

மயிலாப்பூர் கெளரி அம்மாள் (1892 - ஜனவரி 21, 1971)பரதநாட்டியக் கலைஞர், நாட்டிய ஆசிரியர். பரத நாட்டியத்தில் மரபுசார் அபிநயங்களில் நிபுணத்துவம் உள்ளவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மயிலாப்பூர் கெளரி அம்மாள் சென்னை மைலாப்பூரில் 1892-ல் துரைக்கண்ணுவின் மகளாகப் பிறந்தார். ஏ.கே. ராமச்சந்திரன் இவரின் தந்தை. வீணை தனம்மாளின் வழிவந்தவர். இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தன் தாய் வழியில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்தார். ஆலயத்தில் நடனம் ஆடுவதைத் தடைசெய்யும் சட்டம் வந்த பிறகும், கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான வீட்டில் கௌரி அம்மாள் வாழ்ந்தார். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.

மைலாப்பூர் கெளரி அம்மாள்

கலை வாழ்க்கை

சிறுவயதில் தாய்துரைக்கண்ணுவிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். நல்லூர் முனுசாமி நட்டுவனாரிடம் பரதக்கலையை முழுமையாகக் கற்றார். கலாஷேத்ராவில் ஆசிரியராகப் பணியாற்றினார். அபிநயங்கள், பதங்கள், ஜாவாளி ஆகியவைகளில் நிபுணத்துவம் உள்ளவர். பதங்கள், அபிநயங்களை மாணவர்களுக்கு கற்பித்தார். தன் இறுதிகாலம் வரை நாட்டிய ஆசிரியராக இருந்தார். இறுதியாக 1935-ல் தேசிய சங்கீத நாடக அகாதமியில் நடனம் ஆடினார்.

மாணவர்கள்

மறைவு

மயிலாப்பூர் கெளரி அம்மாள் ஜனவரி 21, 1971-ல் சென்னையில் காலமானார்.

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.