மழைப்பாடல் (வெண்முரசு நாவலின் இரண்டாம் பகுதி)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
‘மழைப்பாடல்’ திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பது, குந்தி பாண்டுவை மணப்பது ஆகியன இதில் காட்டப்பட்டுள்ளன. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம் , மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு . காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரமாண்டமான் சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிற்து. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்குக் கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பின்னர் குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுணன் ஆகியோர் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் ஆகியோர் பிறப்பதும் திருதராஷ்டிரருக்குத் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் இதில் இடம்பெற்றுள்ளன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கு வருவதுடன் ‘மழைப்பாடல்’ நிறைவு பெறுகிறது.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதியான ‘மழைப்பாடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 24, 2014இல் முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2014இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
மழைப்பாடலை நற்றிணை பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
காந்தாரியும் சகுனியும் அஸ்தினபுரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு இணையான எதிர்த்தரப்பாகவும் நீதியின் பிரதிநிதியாகவும் குந்தி அஸ்தினபுரிக்குள் வருகிறாள். காந்தாரிக்குக் குருதிமழையென இருட்புதல்வர்கள் வந்து அவள் அருகில் விழுகின்றனர். குந்திக்கு அருள்மழையென அருட் புதல்வர்கள் வந்து அவள் மடியை நிறைக்கின்றனர்.
விசித்திரவீரியனை மணந்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அம்பிகையும் அம்பாலிகையும் தாங்கள் சகோதரிகள் என்பதை மறந்து, தாய்-மகள் போல இணைந்து வாழ்வதும் அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் மனவிலகல் கொண்டு இருபதாண்டுகளாக முகத்துக்கு முகம் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும் அரசர் பாண்டு இறந்தவுடன் இருவரும் மீண்டும் நல்லுறவு கொண்டு, இணைந்தே வனம் புகுகின்றனர்.
கதை மாந்தர்
திருதராஷ்டிரன், பாண்டு, குந்தி, காந்தாரி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் விதுரன், அம்பிகை, அம்பாலிகை, சகுனி, பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
உசாத்துணை
https://venmurasu.in/mazhaippadal/chapter-1
https://venmurasudiscussions.blogspot.com/
[[Category:Tamil Content]]