being created

வெ. வேதாசலம்

From Tamil Wiki
Revision as of 20:18, 29 August 2023 by Navingssv (talk | contribs)

முனைவர் வெ. வேதாசலம் (பிறப்பு: டிசம்பர் 20, 1950) தொல்லியல் ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், அருங்காட்சியகக் காப்பாட்சியர். கீழடி முதல் கட்ட அகழாய்வில் பங்கேற்றவர். தமிழக கல்வெட்டு, தொல்லியல் இடங்களை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். மதுரையை சுற்றியுள்ள சமண குன்றங்களை ஆய்வு செய்து எண்பெருங்குன்றம் நூலின் ஆசிரியர். தமிழக தொல்லியல் துறையின் முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

வெ. வேதாசலம் டிசம்பர் 20, 1950 அன்று மதுரை மாவட்டம் மதிச்சியத்தில் வெள்ளைச்சாமி, வேலமமாள் தம்பதியருக்குப் பிறந்தார். முனைவர் வெ. வேதாசலத்துடன் பிறந்தவர்கள் பதிமூன்று பேர். மதுரை செனாய் நகர் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றார். பொ.யு. 1969 - 70-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யூ.சி பட்டம் பெற்றார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

சென்னையிலுள்ள தமிழக தொல்லியல் துறையில் ஒரு வருடம் தொல்லியல் பயின்று பொ.யு. 1975 ஆம் ஆண்டு தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். டில்லி நேஷனல் மியூசியத்தில் அருங்காட்சியியல் (மியூசியாலஜி) பயின்றுள்ளார். பாண்டிய நாட்டு சமுதாயமும் பண்பாடும் என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராஜர் கல்லூரியில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வெ. வேதாசலம் பொ.யு. 1985 ஆம் ஆண்டு கலாவதியை திருமணம் செய்துக் கொண்டார். வேதாசலம் - கலாவதி தம்பதியருக்கு திருநம்பி, திருநங்கை என இரண்டு குழந்தைகள். தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார்.

ஆய்வு பணி


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.