சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை)

From Tamil Wiki
Revision as of 19:07, 28 August 2023 by Tamizhkalai (talk | contribs)

சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை) கடைச்சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சீத்தலைச்சாத்தனார் சங்கத்தில் அரங்கேற்றப்படும் செய்யுள்களில் அபத்தங்கள் காணும்தோறும் தன் தலையில் எழுத்தாணி வைத்து குத்திக் கொள்வதால் இப்பெயர் பெற்றார் என சில தமிழறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சீத்தலைச்சாத்தனார் எழுதிய பாடல் திருவள்ளுவமாலையில் தொகுக்கப்பட்டது.

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியும்
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றரன்ருே
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

உசாத்துணை