under review

துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார்

From Tamil Wiki
நன்றி - தமிழம்.நெட்

துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார் (துடிசைக்கிழார் சிதம்பரனார்) (மறைவு- டிசம்பர் 30, 1954) தமிழக வரலாற்றாய்வாளர் மற்றும் பழந்தமிழ் நூலாராய்ச்சியாளர்.

பிறப்பு, கல்வி

சிதம்பர முதலியார் கோயம்புத்தூரில் அர்த்தநாரீசுவர முதலியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றார்.

தனிவாழ்க்கை

சிதம்பர முதலியார் காவல்துறையின் ஊர்காவல் படையில் பணிபுரிந்தார். பின்னாளில் வட்டார ஆய்வாளராக (சர்க்கிள் இன்ஸ்பெக்டர்) பதவி உயர்வு பெற்றார்.

பங்களிப்பு

இலக்கிய ஆய்வு

சிதம்பர முதலியார் உ.வே சாமிநாதையர் மற்றும் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஈடுபட்டார்

இலக்கியப்படைப்புகள்

இவர் தன் ஊராகிய கோயம்புத்தூரை அடுத்துள்ள துடியலூரின் செய்திகளை ஆராய்ந்து துடிசைப் புராணம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். தன் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சிகளை தொகுத்து கழகத் தமிழ் வினாவிடை என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

சைவப் பணி

சைவ மதத்தின் மேல் பற்று கொண்டு சிவபூசை விளக்கம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்

வரலாற்றாய்வு

சேர மன்னர்களின் காலம், வரலாறுகளை நன்கு ஆராய்ந்து சேரர் வரலாறு என்ற நூலையும், தமிழின் முதல், இடை, கடை என்ற மூன்று சங்கங்களைப் பற்றி ஆராய்ந்து தமிழ்ச்சங்கங்களின் வரலாறு என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

மறைவு

இவர் டிசம்பர் 30, 1954 அன்று கோயம்புத்தூரில் மரணம் அடைந்தார்.

நூல் 10.png

நூல்கள்

  • துடிசைப் புராணம்
  • உருத்திராக்க விளக்கம்
  • விபூதி விளக்கம்[1]
  • ஆனைந்து
  • திருமந்திரம் குறிப்புரை
  • கழகத் தமிழ் வினாவிடை - 1
  • கழகத் தமிழ் வினாவிடை - 2
  • கழகச் சைவ வினாவிடை - 1
  • கழகச் சைவ வினாவிடை - 2
  • அகத்தியர் வரலாறு
  • சேரர் வரலாறு[2]
  • தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
  • சிவபூசை விளக்கம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page