being created

தேசிகப் பிரபந்தம்

From Tamil Wiki

தேசிகப் பிரபந்தம் வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த நூல்களின் தொகுப்பு. தேசிகர் இயற்றிய அனைத்து தமிழ்ப் பாசுரங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்

தேசிகப் பிரபந்தத்திலுள்ள பாடல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். வைணவ ஆசார்யர். 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதம், மணிப்பிரவாளம் என மூன்று மொழிகளிலும் 120-க்கு மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நூல் அமைப்பு

தேசிகப் பிரபந்தம் 17 பகுதிகளாகத் தொகுக்கப்பட்டது. இப்பகுதிகள் ' 'ரஹஸ்யங்கள்' எனப்பட்டன.

அமிருதரஞ்சனி

அமுதம் போல இனிமையுடையது என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். இதில் 39 பாடல்கள்(பாசுரங்கள்) உள்ளன. சேதனம்(சித்தம் உள்ளவை), அசேதனம்(சித்தம் இல்லாதவை), பரம்பொருள் என மூன்று தத்துவங்களும் வைணவத்தின் மூன்று ரஹஸ்யங்களான த்வயம், சரம ஸ்லோகம், திருமந்திரம் ஆகியவற்றின் பொருள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

அதிகாரசங்கிரகம்

தேசிகர் இயற்றிய தேசிகஸூக்தியின் 32 அதிகாரங்களின் சுருக்கன் அந்தாதித் தொடையாக அமைந்தது. ஆழ்வார்கள், எட்டு ஆசார்யர்கள், ராமானுஜர், ஆளவந்தார், நாதமுனிகள் இவர்களின் சிறப்பும் கூறப்படுகின்றன.

அமிருதாசுவாதினி

ரஹஸ்யத்ரயம், ராமாயணத்தின் சரணாகதிகள்(காக சரணாகதி, விபீஷண சரணாகதி), வராஹ சரமஸ்லோகத்தின் பொருள், அமலனாதிபிரான் பாசுரங்களின் சாரம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பரமபதசோபானம்

தத்துவங்களை அறிதல், சம்சாரத்தில் வெறுப்பு, உலக இன்பங்களில் ஆசையற்று இருத்தல், பாவத்திற்கு அஞ்சுதல், மோட்சம் பெறும் வழிகளைப் பின்பற்றல், உயில் உடலைவிட்டு வெளியேறல், அர்ச்சிராதி (உச்சந்தலை வழியே உயிர் வெளியேறல்), வைகுண்டம் செல்லல், அங்கு நாராயணனைக் கண்டு ஆனந்தம் கொள்ளல்- இவை கூறப்பட்டுள்ளன.

பரமதபங்கம்

தேசிகர் பிற ஞான மார்க்கங்களைச் (பௌத்தம், ஜைனம், சார்வாகம், காணபத்யம் போன்ற) சேர்ந்தவர்களுடன்ன் வாதம் செய்து வைணவமே உயர்ந்தது என நிலைநாட்டிய 'பரமதபங்கம்' என்னும் பிரபந்தத்தின் சுருக்கம்.

மெய்விரதமான்மியம்

காஞ்சிபுரத்தில் பேரருளாளன் அவதரித்த கதை(அத்திகிரி மஹாத்மியம்) கூறப்படுகிறது..

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.