விசாகப்பெருமாள் ஐயர்
விசாகப்பெருமாள் ஐயர்(1799- ) தமிழ் உரையாசிரியர். இலக்கண நூல்களை இயற்றினார். பஞ்ச இலக்கண வினா விடை , பாலபோத இலக்கணம் போன்ற இலக்கண நூல்களை இயற்றினார்
வாழ்க்கைக் குறிப்பு
விசாகப்பெருமாள் ஐயர் திருத்தணிகையில் வீரசைவ சமயத்தாரான கந்தப்பையருக்கு 1799-ல் மகனாகப் பிறந்தார். கல்லாரகரி வீரசைவ மடத்து அதிபர் வழி வந்தவர். சரவணப்பெருமாள் ஐயரும் இவரும் இரட்டையர். இராமாநுச கவிராயரிடம் கல்வி கற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
விசாகப்பெருமாள் ஐயர் 'இயற்றமிழாசிரியர்' என்று அறியப்பட்டார்.நன்னூலுக்கு காண்டிகையுரை எழுதினார். 'பஞ்ச இலக்கண வினாவிடை' எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திற்கான இலக்கணங்களை வினா-விடை முறையில் விளக்கியது. பாலபோத இலக்கணம் நூலில் 19 தலைப்புகளில் தமிழ் இலக்கண விதிகளை விளக்கினார். வடமொழியின் 'சந்திராலோகம்' என்ற அணியிலக்கண நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்து உதாரணப் பாடல்களையும் அளித்தார்.
விசாகப்பெருமாள் ஐயர் மிரன் வின்ஸ்லோவுக்கு தமிழ்-ஆங்கிலப் பேரகராதியைத் தொகுக்கும் பணியில் உதவி புரிந்தார்.
படைப்புகள்
- இலக்கணச்சுருக்க வினாவிடை
- அணியிலக்கண வினாவிடை
- யாப்பிலக்கண வினாவிடை
- பாலபோத இலக்கணம்
- நன்னூல்க் காண்டிகையுரை
- திருக்கோவையார் உரை
- பல்விப்பயன்
உசாத்துணை
தமிழ்ப் பொழில் (34/11), கரந்தைத் தமிழ்ச் சங்கம் · 1959
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.