பல்சுவை இதழ்
From Tamil Wiki
பல்சுவை இதழ்கள்: பொதுவாசிப்புக்கு உரியவை. பொதுவாக அடிப்படைக் கல்வி அடைந்த அனைவரும் வாசிக்கும் மொழிநடையும் சொற்களும் கொண்டவை. அனைத்துவகையான மக்களும் வாசிக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் அனைவருக்குமான உள்ளடக்கம் கொண்டிருப்பவை. எனவே அரசியல், சமூகவியல் செய்திகளையும்; கதை, கவிதை,நாடகங்களையும்; திரைப்படம் நாடகம் போன்ற கேளிக்கைகளைப் பற்றிய செய்திகளையும் வெளியிடுபவை. மத தத்துவம், பக்தி, மருத்துவம், பயணம், சோதிடம், போட்டிகள் என பல வகையான வெளியீடுகள் ஒருங்கே அமைந்திருக்கும். சிறுவர்களுக்கான பகுதிகள், பெண்களுக்கான பகுதிகள், என எல்லா தரப்பினருக்கும் உரியவை இடம்பெற்றிருக்கும். பார்க்க தமிழ் இதழ்கள்
இதழ்பட்டியல்
- விவேகபோதினி
- விவேக சிந்தாமணி
- ஆனந்தபோதினி
- ஆனந்த குணபோதினி
- மனோரஞ்சினி
- குமுதம்
- ஆனந்த விகடன்
- கலைமகள்
- கல்கி
- குமார விகடன்
- சூறாவளி
- பிரசண்ட விகடன்
- தினமணி கதிர்
- குங்குமம்
- சாவி
- தேவி
- ராணி வாராந்தரி
- இதயம் பேசுகிறது
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.