இயன்மொழி வாழ்த்து
From Tamil Wiki
இயன்மொழி வாழ்த்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இந்தக் குடியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இந்தக் குணம் இயல்பானது என்றும், அவற்றை நீயும் இயல்பாகக் கொண்டிருக்கிறாய் என்றும், இன்னோர் போல நீயும் இயல்பாகக் கொடை அளி என்றும், உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகக் கூறுவதும் இயன்மொழி வாழ்த்து[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1128
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்