ஒலியந்தாதி

From Tamil Wiki
Revision as of 13:22, 14 February 2022 by Subhasrees (talk | contribs) (ஒலியந்தாதி - முதல் வரைவு)

ஒலியந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி[1].

இது வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும். சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.

அடிக்குறிப்புகள்

  1. ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான் ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்