ஒலியந்தாதி
From Tamil Wiki
ஒலியந்தாதி என்பது, தமிழில் வழங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களை வடமொழியில் பிரபந்தங்கள் என்பர். ஓரடிக்குப் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல்சந்தமாக அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி ஆகும்[1]. இது வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும். சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமைவதுண்டு.
குறிப்புகள்
- ↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் Template:Webarchive
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.