பெத்லகேம் குறவஞ்சி

From Tamil Wiki

பெத்லகேம் குறவஞ்சி ( 1794) தஞ்சை வேதநாயகம் சாச்திரியார் எழுதிய கிறிஸ்தவ நூல். குற்றாலக்குறவஞ்சியின் செல்வாக்கால் உருவானது.

எழுத்து, வெளியீடு

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் தஞ்சையில் கல்வி பயிலும்போது தன் இருபது வயதில் இதை எழுதியதாகவும், இதுவே அவருடைய முதல் படைப்பு என்றும் சொல்லப்படுகிறது. இது தஞ்சை சரபோஜி-IV அவையில் 1795ல் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

அமைப்பு

பெத்லகேம் குறவஞ்சியின் அமைப்பு கீழ்க்கண்டவாறு

  • இறைவாழ்த்து
  • இயேசுவின் உலா
  • தேவ மோகினி காதல்
  • குறத்தி குறி கூறல்
  • சிங்கன் வருகை

என்னும் ஐந்து பெரும் பகுதிகளைக் கொண்டது; பாயிரம் முதலாக வாழ்த்து ஈறாக 72 உட்பிரிவுகளைக் கொண்டது

இந்நூலில் உள்ள மங்களப்பாடலான

சீரேசு நாதனுக்கு செய மங்களம்,

ஆதி திரியேக நாதனுக்குச் சுப மங்களம்

என்பது இன்றும் கிறிஸ்தவ சபைகளில் பாடப்படுகிறது

உசாத்துணை