under review

தோழி

From Tamil Wiki
Revision as of 19:29, 8 January 2023 by Ramya (talk | contribs)
தோழி (இதழ்)

தோழி (இதழ்) ஈழத்து பெண்கள் இதழ். யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு பெண்ணியம் பற்றி பேசிய இதழ்.

வெளியீடு

இலங்கை யாழ்ப்பாணம் பொன்.ராமநாதன் வீதியில் உள்ள ஆனந்த குமாரசாமி விடுதிலிருந்து வெளிவந்தது. கலை இலக்கியப் போராட்டத்துடன் இணைந்து பெண்களுக்கான தீர்வுகளை மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைக்கும் நோக்குடன் வெளியிடப்பட்ட இதழ். இதன் தொகுப்பாளர் எஸ். தியாகராசா

உள்ளடக்கம்

பெண்ணியக்கருத்துக்களை மிகவும் தீவிரமாகவும், மாக்ஸிய சிந்தனையூடும் வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. அவை பெண்விடுதைப் போராட்டங்கள், உலகநடப்பின் பெண்களின் பங்களிப்பு, பெண் தலைவர்கள், கிராம மட்டத்தில் பெண்களின் நிலை முதலான விடயப்பொருள்களாக் காணப்படுகின்றன.

உசாத்துணை

  • பகுப்பு:தோழி: noolaham
  • தோழி இதழ்கள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.