under review

தோழி

From Tamil Wiki
தோழி (இதழ்)

தோழி (இதழ்)(1984) ஈழத்து பெண்கள் இதழ். யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு பெண்ணியம் பற்றி பேசிய இதழ்.

வெளியீடு

இலங்கை யாழ்ப்பாணம் பொன்.ராமநாதன் வீதியில் உள்ள ஆனந்த குமாரசாமி விடுதிலிருந்து வெளிவந்தது. இதன் தொகுப்பாளர் எஸ். தியாகராசா. தோழியின் முதல் இதழ் 1984-ல் பங்குனி-சித்திரை இதழாக 44 பக்கங்களுடன் வெளிவந்தது.

நோக்கம்

”கலை இலக்கியப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்து பெண்களுக்கான தீர்வுகளை மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைக்க வேண்டும், பெண் எனும் விலங்குக்குள் பூட்டிக் கிடக்கும் விலங்குகளைத் தகர்த்தெறிய, வைரம் தோய்ந்த நெஞ்சங்கள் கோடி பெருகிட வேண்டும்” என்ற நோக்கத்தை முன் அட்டைக் குறிப்பாகக் கொண்டு வெளிவந்தது.

உள்ளடக்கம்

பெண்ணியக்கருத்துக்களை மிகவும் தீவிரமாகவும், மார்க்ஸிய சிந்தனையூடும் வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. அவை பெண்விடுதலைப் போராட்டங்கள், உலகநடப்பில் பெண்களின் பங்களிப்பு, பெண் தலைவர்கள், கிராம மட்டத்தில் பெண்களின் நிலை முதலானவை காணப்படுகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறை, பெண் விடுதலை பற்றிய கட்டுரைகள் உள்ளன. இவ்விதழில் பெண்கள் புனைவுகள் எழுதினர்.

பங்களிப்பாளர்கள்

உசாத்துணை


✅Finalised Page