first review completed

கம்பர் விருது

From Tamil Wiki
Revision as of 12:52, 2 January 2023 by Tamizhkalai (talk | contribs)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் கம்பர் விருதும் ஒன்று. இவ்விருது 2013 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

கம்பர் விருது

கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கம்பனின் புகழ் பரப்பும் வகையில் கவிதை நூல்களை படைப்போர் என்ற வகையில் தமிழ்த் தொண்டாற்றுபவர்களுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2013 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை  இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் கொண்டது.

கம்பர் விருது பெற்றவர்கள் - 2021 வரை

எண் ஆண்டு பரிசு பெற்றோர்
1 2013 முனைவர் பால இரமணி
2 2014 முனைவர் செ.வை. சண்முகம்
3 2015 கோ. செல்வம்
4 2016 இலங்கை ஜெயராஜ்
5 2017 சுகி. சிவம்
6 2018 முனைவர் க. முருகேசன்
7 2019 முனைவர் சரஸ்வதி ராமநாதன்
8 2020 டாக்டர் எச்.வி. ஹண்டே
9 2021 பாரதி பாஸ்கர்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.