நவநீதப் பாட்டியல்

From Tamil Wiki
Revision as of 12:13, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

நவநீதப் பாட்டியல் சிற்றிலக்கண இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று. இதை எழுதியவர் நவநீதநடனார்.

ஆசிரியர்

நவநீதப் பாட்டியலின் ஆசிரியர் நவநீத நடனார். பாட்டியல் நூல்களில் இது அகத்தியர் மரபைச் சேர்ந்தது. உ.வே.சாமிநாதய்யர் இந்நூலின் ஏடுகளை சேகரித்து பிழைதிருத்தி படியெடுத்து வைத்திருந்தார், அச்சேற்ற முடியவில்லை.

நூலமைப்பு

இந்நூல் மூன்று உறுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவை,

  1. பொருத்தவியல்
  2. செய்யுண் மொழியியல்
  3. பொது மொழியியல்

கலித்துறை என்னும் பாடல் வகையால் ஆனது. கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. 108 கலித்துறைப் பாடல்கள் அடங்கியது

உசாத்துணை

.