first review completed

பன்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 14:33, 16 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)

பன்மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களும் நீங்கலாக பிற இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றது பல்மணிமாலை[1][2].

அம்மானை, ஊசல், ஒருபோகு, இல்லாது வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக் முடிவிலே வெள்ளை விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலை[3].

இதில் புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, என்னும் பதினாறு பொருள் கூற்று உறுப்புக்கள் அமைந்திருக்கும்

நூல்கள்

திருவாரூர்ப் பன்மணிமாலை - வைத்தியநாத தேசிகர் - சுதேசமித்திரம் ஸ்டீம் பிரஸ் (1913)

குறிப்புகள்

  1. பன்மணி மாலை பன்னிற் கலம்பகத்
    தொருபோ கம்மானை யூச லிவைநீத்
    தகவல் வெள்ளை யருங்கலித் துறையென்
    றவைசெறி நூறந் தாதியாய் வருமே

    - தொன்னூல் விளக்கம்

  2. அவற்றுள்,
    ஒருபோகு அம்மானை ஊசல் இன்றி
    வருவது பன்மணி மாலை ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல் - பாடல் 814

  3. நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 39 ஆம் பாடல்

உசாத்துணை

வெளி இணைப்புகள்




🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.