being created

பத்ரகாளி

From Tamil Wiki
Revision as of 17:46, 29 September 2022 by Navingssv (talk | contribs)

பத்ரகாளி: பார்வதி தேவியின் ஒரு வடிவம். சிவனின் சடைமயிரிலிருந்து வீரபத்திரருடன் தோன்றியவள். தக்‌ஷனின் யாகத்தை அழிப்பதற்காக பிறந்தவள்.

தோற்றம்

பத்ரகாளியின் தோற்றம் வீரபத்திரர் தோற்றக் கதையுடன் தொடர்புடையது. தக்‌ஷனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி தீயில் விழுந்து மாய்ந்தாள். பார்வதி தீயில் விழுந்த செய்தி கேட்ட சிவன் சினம் கொண்டார். தன் சடை மயிரில் ஒன்றை எடுத்து நிலத்தில் அரைந்தார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர் என்ற கதை தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

பார்க்க: வீரபத்திரர்

புராணங்கள்

அக்னி புராணம்

பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் கம்சன் தேவகியை அடைத்து வைத்திருந்த அறையில் தேவகியின் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தார். வசுதேவரை கிருஷ்ணனை யசோதையிடம் கொடுத்துவிட்டு யசோதையின் மகளை சிறைபட்டிருந்த அறைக்கு எடுத்து வந்தார். கம்சன் அவ்வறைக்கு வந்த போது பெண் குழந்தையை கண்ட அதனை சிறை சுவற்றில் முட்ட முயன்றான். அக்குழந்தை கம்சன் கையிலிருந்து பறந்து ஆகாயத்தின் மேல் சென்றது. அந்த குழந்தை பத்ரகாளியின் ஒரு வடிவம் என அக்னி புராணத்தின் பன்னிரெண்டாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது.

லங்காலட்சுமி

லங்காலட்சுமி இலங்கையை காவல்காத்து வந்தாள். அனுமன் இலங்கைக்குச் சென்ற போது அவனை முதலில் தடுத்து நிறுத்திய லங்காலட்சுமி காளியின் ஒரு வடிவமாக கருதப்படுகிறாள். அனுமன் தன் இடது கையால் லங்காலட்சுமியை அடித்து தள்ளிய போது மயங்கி விழுந்தாள். திரும்பி எழுந்த போது பழைய நினைவுகள் தெளிந்து காளியின் வடிவம் கொண்டாள்.

இராமன், இராவணன் போரை காணமுடியாது வருத்தமுற்ற காளி சிவனிடம் முறையிட்டாள். சிவன் அவள் முன் தோன்றி, “நீ திராவிட நாட்டிற்குச் சென்று அங்கே எனக்காக ஒரு சுயம்புலிங்க கோவிலை உருவாக்கு. நான் அவ்விடத்தில் கம்பனாக பிறந்து இராமாயணத்தை தமிழில் இயற்றுவேன். அப்போது நீ ராமாயணத்தையும், ராம, ராவண யுத்தத்தையும் கேட்கவும், பார்க்கவும் முடியும்” எனக் கூறி மறைந்தார். சிவன் சொல் கேட்ட காளி அதன்படி திராவிட நாட்டிற்கு சென்றாள்.

சோழ மன்னன் கம்பனையும், ஒட்டக்கூத்தரையும் ராமாயணம் பற்றி தமிழில் எழுதும்படி பணிந்தார். ஒட்டக்கூத்தர் தன் பாடங்களை ஆறு மாதத்தில் எழுதிமுடித்துவிட்டார். இறுதி நாள் நெருங்கியும் எழுதாமல் இருந்த கம்பனின் கனவில் சாரதாதேவி தோன்றி, “உனக்கான பாடல்களை நான் எழுதியுள்ளேன் எனச் சொல்லி மறைந்தாள்.” கம்பன் எழுந்த போது தன் அருகில் பாடல்கள் இருப்பதைக் கண்டு அதனை சோழ அவையில் பாடினார். சிவன் கம்பனாக பிறந்ததாகவும், கம்பன் போர் பற்றி பாடும் போது காளி நடனமாடியதாகவும் கதை உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்பர் இனத்தவர்கள் காளி கோவிலுக்கு பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.

சைவம்

சைவ மரபில் பத்ரகாளி சக்தியின் முப்பத்திரண்டு வடிவங்களுள் ஒன்றாக கருதப்படுகிறாள். சத்சஹஸ்ர சம்கிதத்தில் ருத்ரகாளி எனக் குறிப்பிடப்படுகிறாள். தாந்திரீக மரபில் சக்தியின் ஒவ்வொரு வடிவமும் ஸ்ரீ சக்கரத்தின் பதினாறு பகுதியில் ஒன்றாக கருதப்படுகிறது. சக்தியின் ஒவ்வொரு வடிவத்திற்கு ஒரு அமைப்பும், ஒரு மிருக வாகனமும் உள்ளது.

சிற்ப சாஸ்திரம்

பார்வதி தேவியின் ஒரு வடிவமாக கருதப்படும் பத்ரகாளி பதினெட்டு கைகள் கொண்டவள். அவற்றில் அக்‌ஷமாலை, திரிசூலம், கட்கம் (வாள்), சந்திரன், பானம், தனுஷ், சங்கு, பத்மம், உடுக்கை, வேள்வி கரண்டி, கமண்டலம், தண்டம், சக்தி, அக்னி, கிருஷ்ணஜூனம், நீர் என பதினாறு கைகளில் ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும். மீதியுள்ள இரு கைகளில் அபய முத்திரையும், கலத்தையும் தாங்கி இருக்கும். பத்ரகாளி நான்கு சிம்மம் பூட்டி ரதத்தின் மேலிருப்பாள். சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் காளியின் கோலத்திற்கு ’அழிதாசனா’ என்று பெயர்.

பத்ரகாளி மந்திரம்

ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி

மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ

பத்ரகாளி பாட்டு

பத்ரகாளி பாட்டு கேரளாவில் உள்ள நாட்டுப்புற பாடல். பத்ரகாளியை புகழ்ந்து பாடும் இப்பாடல்கள் கேரள கோவில்களில் விழா நாட்களில் பாடப்படுகிறது. கேரளத்தில் சர்க்காரா, கொடுங்கல்லூர், ஆட்டுக்கல், செட்டிகுளங்கரா, திருமந்தம்குன்னு, சோட்டனிகாரை ஆகிய இடங்களில் காளி கோவில்கள் உள்ளன.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.