பதுமனார்(உரையாசிரியர்)
பதுமனார் (பதுமாசாரியார், பொ.யு.13-ம் நூற்றாண்டு) நாலடியாரைத் தொகுத்து, உரை எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பதுமனார் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பதுமனார் என்ற பெயரால் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் எனக் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. பதுமனார் இந்த நூலினைப் பால் முறை, அதிகார முறை, இயல்முறை என வகுத்து முறைப்படுத்தி, நூலின் பொருளினை விளக்குவதாக அமைந்த உரையொன்றும் எழுதினார். திருக்குறளின் அதிகார அடைவைப் பின்பற்றி இயல்களையும் அதிகாரங்களை அமைத்தார்.
வானிடு வில்லின் வரவறியா, வாய்மையால்,
கானிலந் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும், 'எம் உள்ளத்து
முன்னியவை முடிக!'
என்ற நாலடியாரின் கடவுள் வாழ்த்துப் பாடலும் பதுமனார் இயற்றியது எனக் கருதப்படுகிறது.
உசாத்துணை
நாலடியார் தெளிவுரை-புலியூர்க் கேசிகன், தமிழிணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:50:44 IST