under review

உள்கோள்(கைக்கிளை-பெண்பால் கூற்று)

From Tamil Wiki
Revision as of 03:44, 22 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உள்கோள் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது.(உட்கோள்-மனதின் எண்ணம்). தலைவனை நெஞ்சத்தில் நினைத்த பெண்ணொருத்தியின் உள்ளக் கிடக்கையைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவனை விரும்பிய தலைவி காதலை நெஞ்சில் கொண்டது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வண்டுஅமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண்தொடி அரிவை உள் கொண்டன்று(கொளு 15.3 )

வெண்பா

உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா
கள்அவிழ் தாரானும் கைக்கு அணையான் - எள்ளிச்
சிறுபுன் மாலைத் தலைவரின்
உறுதுயர் அவலத்துயலோ அரிதே (296)

பொருள்: காதல் துன்பத்தால் மெலிய, வளையல்களும் கழல்கின்றன; தேன் சிந்தும் மாலையை உடைய தலைவன் என் கைகளுக்குக் கிட்டவில்லை; மாலைக்காலம் செய்கின்ற துன்பத்திலிருந்து பிழைத்தல் அரிது.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:44:17 IST