being created

கற்பு முல்லை(பொதுவியல் திணை)

From Tamil Wiki
Revision as of 02:24, 21 June 2025 by Jayashree (talk | contribs)

கற்பு முல்லை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன. கணவன் அருகில்லாத போதும் தன் கற்பையே நிறையாகவும், காவலாகவும் கொண்டு வாழ்தலையும், விருந்தோம்பும் செல்வமிக்க தன் புகுந்த இல்லத்தின் செல்வத்தை சிறப்பித்துக் கூறலும் கற்பு முல்லை என்னும் துறையில் அடங்கும்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் இருகொளுப்பாடல்கள் இத்துறையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.

கொளு 1

நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் சென்ற தலைவி, அத்தகைய கணவனது பெருஞ் செல்வத்தைப் புகழ்ந்து கூறுதல்.

பொன்திகழ் சுணங்கின் பூ கண் அரிவை
நன்றறி கொழுநனை நலமிகுந்தன்று (கொளு 13.8)

வெண்பா

நெய்கொள் நிணம் தூநிறைய அமைத்திட்ட
குய்கொள் அடிசில் பிறர் நுகர்க - வைகலும்
அங்குழைக் கீரை அடகும் இசையினும்
எம்கணவன் நல்கல் இனிது (282)

பொருள்: நெய்யைத் தன்னிடத்தே கொண்ட, நிணமும் தசையும் மிகுதியாகக் கூட்டி ஆக்கின, பொரிக்கறியை உடைத்தான சோற்றைப், பிறர் அருந்த, அழகிய தளிரையுடைய கீரையாகிய இலைக்கறியையே அருந்தினாலும், எமது கணவன் எமக்கு அருளும் அதுவே, எமக்கு நுகர்தற்கு இனிதாயிருக்கும் . கணவன் அருளுதலைப்பெற்றால் கீரை இனிது எனக் கற்பின் மிகுதியால் உரைத்த இயல்பு கூறப்பட்டது

கொளு 2

கணவன் பிரிந்த காலத்தில் தலைவி தன் உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தல்.

மேவரும் கணவன் தணப்பத் தன்வயின்
காவல் கூறினும் அத்துறை ஆகும் (கொளு 13.9)

வெண்பா

ஊழிதோறும் ஊழி தொழப்பட்டு உலைவின்றி
ஆழிசூழ் வையத்து அகம் மலிய - வாழி
கருவரை மார்பின் எம் காதலன் நல்க
வருவிருந்து ஓம்பபும் வளம் (284)

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.