being created

தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்

From Tamil Wiki
Revision as of 00:11, 18 August 2022 by Tamizhkalai (talk | contribs)

தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் (சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் ஆகஸ்ட் 29, 1890-மார்ச் 1, 1934) இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தும் நாடகங்களை எழுதி, இயக்கியவர். சதாவதானி. பாவலர் பாய்ஸ்” என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து, “கதரின் வெற்றி”, “தேசியக் கொடி”, “பதிபக்தி” என இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தி, பல நாடகங்களை இயற்றி, மக்களிடைய தேசபக்தியை வளர்த்தார்.

பிறப்பு, கல்வி

தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ஆகஸ்ட் 29, 1890 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொன்னுசாமி கிராமணியாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவரது இளய சகோதரர். தந்தை பொன்னுசாமி கிராமணியார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரான அட்டாவதாரம் சுப்பராய செட்டியாரிடம் தமிழ் பயின்றவர். தன் பள்ளிப்படிப்பை சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று முத்தியால்பேட்டை அரசினர்பள்லியின் தலமைத் தமிழாசிரியராகப் பணி செய்தார்.

நாடகப்பணி

பாவலர் 1920இல் பால மனோகர நாடக சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கினார். தனபதி, விஜய விலோசனை, பதி பக்தி, கதர் பக்தி, பம்பாய் மெயில் போன்ற நாடகங்களைஎழுதி மேடையேற்றியுள்ளார். பத்திரிகையாளராகவும், புனைகதையாசிரியராகவும் விளங்கியவர் பாவலர். அவர் காலத்தில் அச்சு ஊடகங்கள் செல்வாக்குடன் விளங்கியதைக் கண்டு அதற்கேற்ப நாடகங்களை அமைத்தார். பாவலரின் நாடகப் போக்குகளா

காந்திய இயக்கம் தொடர்பான நாடகங்களை உருவாக்கியது.
மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அமைத்தது.
பாடல் என்னும் நிகழ்த்து வடிவத்திலிருந்து, புனை கதைகளைப் போலப் பேசும் மரபு சார்ந்த நாடகங்களை உருவாக்கியது.
அவர் காலத்திய வடுவூர் துரைசாமி, ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற துப்பறியும் கதாசிரியர்களைப் பின்பற்றித் துப்பறியும் நாடகங்களை மேடையேற்றியது. (கதர் பக்தி ஒரு துப்பறியும் தேசிய நாடகம் என்றே அச்சிடப்பட்டது











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.