ந. பெரியசாமி

From Tamil Wiki
Revision as of 16:04, 12 August 2022 by Ramya (talk | contribs)

ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971இல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலம் தொலைதூரக் கல்லூரியில் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு பயின்றார். ஆகஸ்ட் 30, 2001இல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன்.

இலக்கிய வாழ்க்கை

1990இல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், இடது சாரி அரசியல் என இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

விருது

  • தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது
  • கலகம் விருது
  • அசோகமித்ரன் படைப்பூக்க விருது

நூல்கள் பட்டியல்

கவிதைகள்
  • நதிச்சிறை 2004
  • மதுவாகினி 2012
  • தோட்டாக்கள் பாயும் வெளி 2014
  • குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் -2016
  • கடைசி பெஞ்ச் (இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு) 2021
கட்டுரை தொகுப்பு
  • மொழியின் நிழல் 2021
  • இடது சாரி அரசியல்

இணைப்புகள்

  • ந.பெரியசாமி: இந்து தமிழ்திசை: கட்டுரைகள்