being created

பொய்கையாழ்வார்

From Tamil Wiki
Revision as of 03:35, 11 August 2022 by Tamizhkalai (talk | contribs)
sripaadham.wordpress.com

பொய்கையாழ்வார் தமிழ் வைணவ நெறியின் பன்னிரு ஆழ்வார்களிலும், முதலாழ்வார்கள் மூவரிலும் முதல்வர்.

பொய்கையாழ்வார் பாடிய 100 அந்தாதிகளின் தொகுப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் திருவந்தாதி எனப்படுகிறது. முழுமுதல் தெய்வமாக திருமாலையே பாடிய போதும், சிவ விஷ்ணு பேதம் பார்க்காமல், இருபெரும் தெய்வமும் ஒன்றே என்று பாடியவர்.

பிறப்பு

சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்-திருவெஃகா

காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலைச் சேர்ந்த பொய்கையில் தாமரை மலரில் குழவியாக அவதரித்தார். பொய்கையில் கண்டெடுக்கப்பட்டதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார். ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் பெருமாளின் சங்கின் அம்சமாகக் கருதப்படுகிறார்.






உசாத்துணை

பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்- வளவ துரையன் சொல்வனம் ஜூலை 22



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.