ப. சிவகாமி

From Tamil Wiki

ப. சிவகாமி (பிறப்பு:1957) எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

தனிவாழ்க்கை

இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றினார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேலூர் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலாளராகவும் சுற்றுலாத்துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2009 முதல் இவர் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார்

இலக்கிய வாழ்க்கை

1985களில் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். பழையன கழிதல், ஆனந்தாயி போன்ற நாவல்களை எழுதினார். 1993இல் ’நாளும் தொடரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 1995 முதல் தமிழ் இலக்கிய இதழான ”புதிய கோடாங்கி”யில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

நூல் பட்டியல்

  • பழையன கழிதலும்
  • பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்பு
  • குறுக்கு வெட்டு
  • இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
  • நாளும் தொடரும்
  • கடைசி மாந்தர்
  • உடல் அரசியல்

உசாத்துணை

ப. சிவகாமி: தென்றல்