being created

உதயண குமார காவியம்

From Tamil Wiki
Revision as of 13:56, 14 August 2022 by ASN (talk | contribs) (Para Added)

உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண குமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பதிப்பு, வெளியீடு

உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935-ம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

நூல் அமைப்பு

369 பாடல்களைக் கொண்ட இந்த நூல், உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை  அறிந்து கொள்ள, உதயண குமார காவியம் நூல் உதவுகிறது. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.

சீவக சிந்தாமணி, கந்தபுராணம் போன்ற பெரு நூல்களுக்குச் சுருக்க நூல் இயற்றும் மரபு தமிழிலே உண்டு. அந்த வகையில், பெருங்கதையின் சுருக்கமாக உருவான நூலே உதயணகுமார காவியம். விருத்தப்பாவில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்.

கதை

உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன். அவந்தி நாட்டு மன்னன் பிரச்சோதனனால் சிறை பிடிக்கப்படுகிறான். பின் சிறையிலிருந்து தப்பி, பிரச்சோதனனின் மகள் வாசவதத்தையைக் காதலித்துத் திருமணம் செய்கிறான். வாழ்வாங்கு வாழ்ந்து இறுதியில் வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து துறவறம் மேற்கொள்கிறான்

கௌசாம்பி நகரத்தின் மன்னன் சதானிகனுக்கும் மனைவி மிருகாபதிக்கும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர் . அவர்களில் முதலாமவன் உதயணன். இரண்டாவது மகன் பிங்கலன். மூன்றாவது மகன் கடகன்.

உதயணனின் நண்ன் யூகி. இவன் சேதிநாட்டின் முனிவர்கள் தலைவரான பிரமசுந்தர முனிவரின் மகன். உதயணனுன் யூகியும் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர். இருவரும் கலைகளில் சிறந்தர்களாய் இருந்தனர். உதயணன் தனது யாழிசை வல்லமையால் தெய்வயானை ஒன்று பரிசாகப் பெற்றான் . குபேரனின் இயக்கர்களில் ஒருவனான நஞ்சுகன் என்பவனின் நட்பையும் பெற்றான். தனது மாமனின் நகரமான வைசாலிநகரை உதயணன் ஆட்சி செய்தான். யூகி அவனுக்கு அமைச்சனாக விளங்கினான்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.