being created

கோ. வடிவேலு செட்டியார்

From Tamil Wiki
Revision as of 23:50, 12 August 2022 by Tamizhkalai (talk | contribs)

கோ. வடிவேலு செட்டியார் (K. Vadivelu Chettiar 1863 - 1936) அத்வைத வேதாந்தம், மற்றும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும், தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்ற தமிழறிஞர். "மகாவித்துவான்" என்று அழைக்கப்பட்டவர்.

பிறப்பு,கல்வி

1863-ஆம் ஆண்டு சென்னை கோமளேசுவரன்பேட்டை சுப்பராயச் செட்டியார் - தனகோட்டி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின்னர் 20-ஆம் வயது வரையிலும் தம்முடைய தந்தையாருக்கு உதவியாக மளிகைக் கடையில் பணி செய்தார்.

அவரது மளிகைக் கடைக்கு வரும் தமிழாசிரியரும், புலவருமான இராமானுஜ நாயக்கர் பல சுவையான தமிழ்ப்பாடல்களை பொருளுடன், கவிநயத்துடன் கூறுவார். அதை கேட்டு தமிழ் இலக்கியங்களின் மீது கோ. வடிவேலு செட்டியாருக்கு பெரும் பற்று ஏற்பட்டது. இலக்கணம், இலக்கியம், புராணங்கள் என பல வகைப்பட்ட நூல்கள் அவருக்குப் பரிச்சயமாயின. இராமானுஜ நாயக்கருடனான் இத்தகைய தொடர்பு ஏழு ஆண்டுகள் தொடர்ந்தது.

தனிவாழ்க்கை

தன் இருபதாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். 26ஆம் வயது வரை கடையில் வணிகம் செய்துகொண்டே தம்முடைய குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

தமிழ்க் கல்வியின் மீதான விருப்பத்தால் அவர் வணிகத்தை கவனிப்பதில் தடை ஏற்பட்டு, குடும்பத்தினருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அப்போது இராமானந்த யோகிகள் என்னும் மகாவித்துவான் இராமசாமி நாயுடு, சுப்பன் செட்டியார், மயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்களிடம் தொடர்பு கொண்டு தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். இவர் கொள்முதலுக்குச் செல்லும் பாவனையில் புலவர்களிடம் பாடம் கேட்கச் செல்லலானார். இதுவும் குடும்பத்தினரிடையே கசப்பை ஏற்படுத்தியது. உறவுகளாலும், வியாபாரத்தாலும் மன உளைச்சல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் ரிப்பன் அச்சக உரிமையாளரான சை.இரத்தினச் செட்டியாரின் தொடர்பு வடிவேலு செட்டியாரிடம் வேதாந்தம் படிக்கச் சென்றார். வடிவேலு செட்டியாரின் மனநிலை அறிந்து இரத்தின செட்டியார் 1896-ல் தங்கசாலைத் தெருவில் தொடங்கப்பட்ட இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் பதவியை இவருக்கு வாங்கித் தந்தார்.

பள்ளியில் பணியாற்றியபோது, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மொ. அ. துரை அரங்கனார், மு. வரதராசனார் போன்ற தமிழ் ஆர்வலர்கள் அவரிடம் தமிழும் தத்துவமும் பயில வந்தனர்.

எழுதிய நூல்கள்[தொகு]

வடிவேலு செட்டியார், நாற்பத்தைந்து நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். அதில்,

  • திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான விளக்கம்
  • கைவல்ய நவநீதம் மூலம் - மூலத்துக்கு இயைந்த வசன வினா - விடை, மேற்கோளுடன் விரிவுரை
  • பகவத்கீதை - மூலத்துக்கு இயைந்த வசனமும் விருத்தியுரையும்
  • சர்வ தரிசன சங்கிரகம்

ஆகியவை அடங்கும்.

இந்தியத் தத்துவத்தைப் பற்றிய நூல்கள் எழுதியுள்ள அறிஞர்கள் அனைவரும் தவறாது குறிப்பிடுகின்ற நூல் "சர்வதரிசன சங்கிரகம்", இந்திய தத்துவ தரிசனங்களைப் பதினாறு தலைப்புகளில் பகுத்து விளக்கியுள்ள இந்த வடமொழி நூலை இராமச்சந்திர சாத்திரியார் என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்து நல்ல முன்னுரையுடனும் குறிப்பிடத்தக்க குறிப்புகளுடனும் 1910 இல் வெளியிட்டார். வேதத்துக்கு உரை வகுத்த சாயனருடன் பிறந்த ”வித்யாரண்யர்” இந்நூலின் ஆசிரியர் ஆவார். இதேபோன்று, திருக்குறள் பரிமேலழகர் உரையிலுள்ள இலக்கண நுட்பங்களையும் தத்துவக் குறிப்புகளையும் தெளிவாக விளக்கி இவரால் எழுதப்பட்ட குறிப்புகள், அறிஞர்களால் பாராட்டப்படுகின்றன. இந்தத் திருக்குறள் நூலில் எல்லா குறள்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. செட்டியாரின் நண்பர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்துகொடுத்து தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொன்னதாகச் செட்டியார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மொழிபெயர்ப்புப் பகுதிகளில் பெரும்பாலானவை துரு பாதிரியாருடைய மொழிபெயர்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.