standardised

வண்ணக்கன் சொருமருங்குமரனார்

From Tamil Wiki

வண்ணக்கன் சொருமருங்குமரனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது

வாழ்க்கைக் குறிப்பு

வட நாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் நாணய ஆய்வாளர் தொழில் செய்பவர்களை வடமவண்ணக்கன் என குறிக்கும் வழக்கம் இருந்தது. இவரை அவ்வாறு குறிக்காத்தால் தமிழகத்தில் நாணய ஆய்வாளர் தொழில் செய்து வந்ததார் என்று தமிழறிஞர்கள் கருதுகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில்(275-ஆவது பாடல்) உள்ளது. களவொழுக்கம் வழங்கும் தலைவன் கடுமா வழங்கும் காட்டு வழியில் வருவதால் வரைந்து கொண்டு உடனிருந்து வாழ்க என தோழி தலைவனுக்கு வரைவு கடாவும் துறையமைந்த செய்யுளாக உள்ளது. குறிஞ்சித்திணைப்பாடல்.

குறிஞ்சித்திணை செய்திகள்
  • அரும்புகள் முக மலர்ந்த கரிய காம்பையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய மலர் பாறைமேலுதிர்ந்து பரவாநிற்கும் நல்ல மலை.
  • ஓயாத முழக்கமொடு மழை மிகுத்து இடியிடித்து மேகம் ஓங்கிச் சென்று பெய்யத் தொடங்கிய குளிர்ச்சிமிக்க மலை.
  • மூங்கில் நெருங்கிப் பரந்த மிக உயர்ந்த நெடிய சிகரம் உடையது.
  • கொடிய சிங்கமுதலிய விலங்குகள் இயங்கும் இரவைக் கொண்டது.

பாடல் நடை

நற்றிணை: 275

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்-
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட!- நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
நடு நாள் வருதி; நோகோ யானே.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.