வடமோடிக்கூத்து

From Tamil Wiki
Revision as of 17:55, 5 July 2022 by Ramya (talk | contribs)

வடமோடிக்கூத்து ஈழத்து நாட்டுக்கூத்து வடிவங்களில் ஒரு வகை.

பண்புகள்

  • இசை: தமிழ் மரபிற்கு வெளியேயிருந்து வந்த இசை கலந்திருக்கும்.
  • ஆரியக்கூத்தின் பண்புகள் கலந்திருக்கும்
  • போரையும், வெற்றியும் மையமாகக் கொண்டு வீரரசம் எஞ்சியிருக்கும்
  • கூத்துக்கள் ஆடப்படும் மேடையான கூத்துக்களரியின் அமைப்பில் வித்தியாசம் உள்ளது.
  • ஒரு பாத்திரம் களரிக்கு வரும்போது வரவுப்பாட்டை குறிப்பிட்ட பாத்திரமே பாடிக்கொண்டு ஆடிவரும். அந்தப்பாத்திரமே தன்னை சபைக்கு அறிமுகப்படுத்தும்.
  • வடமோடியில் வரவு ஆட்டத்திற்குப்பிறகு வரும் பாடல்களை தாமே படிப்பார்.
  • கூத்தர்கள் அணியும் ஆடை கரப்புடுப்பு எனப்படும். உடைகள் தென்மோடிக்கூத்துக்காரர்களை விட பாரமானதாக இருக்கும்.
  • கூத்தில் ராஜாக்கள் போருக்குப் போகும்போது மரவுரி அணிவர்.
  • வட்டாரி, வில் போன்ற ஆயுதங்களாஇப் பயன்படுத்துவர்.
  • பாட்டுக்களின் இசை நீளம் குறைந்தும் விரைவானதாகவும் இருக்கும். விறுவிறுப்பாகவும் குறுகியதாகவும் அமையும்.
  • பாட்டுக்களின் விருத்தங்கள் துரித இசையுடையதாக இருக்கும்.
  • பாடல் பாடும்போது பக்கப்பாட்டுக்காரர் சேர்ந்து படிப்பர். பாடல் முழுவதையும் திரும்பப் பாடுவர்.
  • களரியை விட்டுப்போகும்போது துரிதமான ஆட்டம் உள்ளது. இது காலமேற்றம் என்று அழைக்கப்படுகிறது.
  • கந்தார்த்தம் வடமோடியின் சிறப்பம்சம். கந்தார்த்தம் என்பது விருத்தம் பாடி முடித்து தருப்பாடுதலாக அமையும்.