ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள்
ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்கள் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் அஷ்ட பிரபந்தங்களில் ஒன்று. ஶ்ரீரங்கத்தில் கோவில் கொண்ட ரங்கநாதரையும், ரெங்கநாயகியையும் பற்ற்றிய ஊசல் என்னும் சிற்றிலக்கியம்
ஆசிரியர்
ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்களை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
நூல் அமைப்பு
திருவரங்கத்தில் கோவில் கொண்ட ரங்கநாதர் மேல் இயற்றப்பட்ட ஊசல் என்பதால் இப்பெயர் பெற்றது. 33 ஆசிரிய விருத்தப் பாக்களால் ஆனது. ஒவ்வொரு பாடலும் திருவரங்கத்தின், அரங்கரின் பெருமையைச் சொல்லி, 'ஆடீரூசல்' என முடிவடைகிறது. ஒவ்வொரு பாடலின் முதல் பகுதியும் ஆழ்வார்கள், ராமானுஜர் மற்றும் வைணவ் ஆசார்யர்களின் பெருமையைகூறி, அவர்களால் வணங்கப்பட்ட அரங்கனின் பெருமையைக் கூறி 'ஆடீரூசல்' என முடிவடைகிறது.
பாடல் நடை
புண்டரிகத் தவன்றவஞ்செய் திறைஞ்சுங் கோயில்
புரிசடையோன் புராணஞ்செய் தேத்துங் கோயில்
பண்டிரவி குலத்தரசர் பணிந்த கோயில்
பரிந்திலங்கைக் கோன்கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமுங் கோபுரமு மதிலுஞ் செம்பொன்
மாளிகையுந் தண்டலையு மலிந்த கோயில்
அண்டர்தொழுந் திருவரங்கம் பெரிய கோயில்
அமர்ந்துறையும் பெருமானா ராடி ரூசல்
உசாத்துணை
அஷ்ட பிரபந்தம், தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.