பொய்கையாழ்வார்

From Tamil Wiki
Revision as of 02:41, 25 June 2022 by Tamizhkalai (talk | contribs)

தமிழ் வைணவ நெறியின் பன்னிரு ஆழ்வார்களில் முதல்வர்.இவர் பாடிய 100 அந்தாதிகளின் தொகுப்பு நாலாயிர திவப் பிரபந்தத்தின் முதலந்தாதி எனப்படுகிறது. முழுமுதல் தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் திருமாலையே பாடிய போதும், சிவ விஷ்ணு பேதம் பார்க்காமல், இருபெரும் தெய்வமும் ஒன்றே என்று பாடியவர்.

பிறப்பு

த்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தார். அவர் பொய்கையில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.