ஜான் மென்னி

From Tamil Wiki

ஜான் மென்னி (John George Mennie) , (26 நவம்பர் 1911 – 24 ஆகஸ்ட் 1982) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவியர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவர்.

(பார்க்க சயாம் மரண ரயில்பாதை )

பிறப்பு, கல்வி

ஜான் மென்னி 28, கிளாரன்ஸ் தெரு, அபெர்தீன், ஸ்காட்லாந்தில் ( 28 Clarence Street, Aberdeen, Scotland) 26 நவம்பர் 1911 ல் ராபர்ட் மென்னிக்கும் மாரக்கரெட்டுக்கும் பிறந்தார். அவர் வீட்டில் ஜாக் என அழைக்கப்பட்டார். அபெர்தீனில் க்ரே கவின்கலைப் பள்ளியில் கலை பயின்றார் (Gray's School of Art) பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் கவின்கலைப் பள்ளியிலும் பயின்றார். படிப்புக்குப்பின் தொழில்முறை ஓவியராக லண்டனில் பணியாற்றும்போது 1940ல் ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார்.

சயாம் மரண ரயில்பாதையில்

ஜான் மென்னில் 1941 ல் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டார் (எண் 1604539 , 2nd Highland A.A. regiment, H.K.S.R.A. ) 15 பெப்ருவரி 1942 ல் அவர் ஜப்பானியர்களிடம் கைதியாக பிடிபட்டார். 1945 ஆகஸ்ட் வரை ஜப்பானியர்களிடம் மென்னி போர்க்கைதியாக இருந்தார். 1946ல் படையில் இருந்து விடுபட்டு அபெர்தீன் திருப்பினார்.

சயாம் மரண ரயில்பாதை திட்டத்தில் மிகக்கடுமையான வாழ்க்கையை அனுபவித்தவர்களில் மென்னி ஒருவர் மென்னி 5 செப்டெம்பர் 1946ல், போர்முடிந்து தாய்லாந்தில் பிரட்சி ( ) மீட்பு முகாமில் இருந்த போது அந்த அனுபவத்தை தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1942 முதல் அவர் சாங்கி சிறையில் இருந்தார். ஐந்துநாள் ரயில் பயணத்தில் அவர் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். நவம்பர் 3 ஆம் தேதி அவர் தாய்லாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டோன்புரி Kontonburi என்னும் ஊரிலிருந்து மேலும் நான்குநாள் மே கிளாங் (Mae Klong) ஆறு வழியாக அகன்ற படகில் பயணம் செய்து ஒரு மலைச்சரிவில் ஆற்றங்கரையில் கொண்டுசென்று இறக்கப்பட்டார். அவர்கள் அங்கேயே கிடைக்கும் மூங்கில்களையும் ஓலைகளையும் கொண்டு ஒரு முகாம் அமைக்கும்படி ஆணையிடப்பட்டனர். கானோ என அழைக்கப்பட்ட அவ்விடத்தில் அவர்கள் பத்து மைல் தொலைவுக்கு மலைகளை வெட்டி ரயில்பாதை அமைக்கும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் அறுநூறுபேர் இருந்தனர். ஆறுமாத காலத்தில் அவர்களில் 125 பேர் மரணம்டைந்தனர்

மென்னி கானோ முகாமிலிருந்து 1943ல் இருந்து கிளம்பி கண்டோன்புரியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருந்த சுங்காய் என்னும் ஊரை 1944ல் சென்றடைந்தார். அங்கிருந்து நாகோம் பாடன் என்னும் ஊரைச் சென்றடைந்தார். உலகின் இரண்டாவது பெரிய புத்தர் ஆலயம் இருக்கும் ஊர் அது என அவர் தன் அன்னைக்கு எழுதினார். ஜனவரி 1945ல் மென்னி டமவான் என்னும் முகாமுக்கும் மே 1945ல் அங்கிருந்து பிராட்சி முகாமுக்கும் மாற்றப்பட்டார். அங்கு அவர்கள் வெடிமருந்துகளை பாதுகாப்பாக வைக்கும்பொருட்டு பாறையை வெட்டி சுரங்கப்பாதை அமைக்கும்படி ஆணையிடப்பட்டனர்.