ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்
From Tamil Wiki
ஆஷ்லி ஜார் ஓல்ட் ( Ashley George Old) (1913-2001) ஆங்கிலேய ஓவியர். சயாம் மரணரயில்பாதையின் கொடுமைகளை பதிவுசெய்தவர். அவை போர்க்குற்ற விசாரணையில் சான்றுகளாக இருந்தன்
பார்க்க சயாம் மரண ரயில்பாதை
கல்வி
பிரிட்டனில் 1913ல் பிறந்த ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் நார்தாம்ப்டன் கவின்கலைக் கல்லுரியில் பயின்றார். அங்கே உடற்கூறு ஓவியக்கலை பயின்றார். புகழ்பெற்ற சார்ல்டன் ஆர்ட்டிஸ்ட்ஸ் (Carlton Artists) என்னும் கலைநிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் சேம்பர்வில் (Camberwell School of Art) கவின்கலைக் கல்லூரியில் பயின்றார்.