குமுதம் தீராநதி (இதழ்)
குமுதம் தீராநதி (2002) குமுதம் குழுமம் வெளியிட்ட இலக்கியத்துக்கான மாத இதழ். கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, நேர்காணல் என நவீன இலக்கியத்துக்குப் பல முக்கியப் பங்களிப்புகளைத் தந்தது.
வெளியீடு
குமுதம் தீராநதி ஜூன் 2002 முதல் வெளிவந்த இலக்கியத்துக்கான இடைநிலை மாத இதழ். குமுதம் குழுமம் இதனை வெளியிட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவந்த தீராநதி இதழ் இடைநின்று பின் மீண்டும் வெளிவந்தது.
ஆசிரியர்கள்
குமுதம் தீராநதி இதழின் தொடக்க கால ஆசிரியராக ராவ் செயல்பட்டார். பொறுப்பாசிரியர்களாக மணாவும் இரா. மணிகண்டனும் இருந்தனர். செப்டம்பர் 2003 முதல் டாக்டர் இரா. மணிகண்டனே இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். மணாவும், இரா. மணிகண்டனும் பொறுப்பாசிரியர்களாக இருந்த காலகட்டத்தில் கலை, இலக்கியத்துடன் அரசியல் சார்ந்த செய்திகளும் விவாதங்களும் தீராநதியில் இடம் பெற்றன.
இரா. மணிகண்டன் ஆசிரியராக முழுப் பொறுப்பேற்ற பின் அரசியல் சார்ந்த விவாதங்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் இலக்கியத்திற்கான இதழாக வெளிவந்தது. தளவாய் சுந்தரம், கடற்கரய் ஆகியோர் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.
உள்ளடக்கம்
"இலக்கிய உலகில் யாருடைய வெளியையும் அபகரிக்கும் நோக்கமெல்லாம் எங்களுக்கில்லை. சிறு சிறு குழு வாதங்களுக்கு அப்பால் நம் குரலை கொண்டு போக வேண்டிய அவசியமிருக்கிறது" என்ற அறிவிப்புடன் தீராநதியின் முதல் இதழ் வெளியானது. இதழின் தொடக்க காலத்தில் சுந்தர ராமசாமி வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் என நவீன இலக்கியத்துக்குப் பல முக்கியப் பங்களிப்புகளைத் தந்தது தீராநதி.
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் இடம்பெற்றன. சாகித்ய அகாதெமி விருது குறித்த சர்ச்சை, பின் நவீனத்துவ நாவல்கள் குறித்த சர்ச்சை என பல்வேறு விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் தீராநதி இடமளித்தது. வாசகர்களின் கருத்துக்கு முக்கியத்துவமளித்து இரு பக்கங்களில் வாசகர் கடிதங்களை வெளியிட்டது
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.