first review completed

கி.சு.வி.இலட்சுமி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 21:52, 2 February 2022 by Logamadevi (talk | contribs)


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

லட்சுமி அம்மாள் மகளுடன்

கி.சு.வி.இலட்சுமி அம்மாள் திருக்குறளுக்கு புகழ்பெற்ற ஜமீன்தாரிணி உரையை எழுதிய அறிஞர். திருக்குறள் தீபாலங்காரம் என்னும் இந்நூல் 1029ல் வெளிவந்தது.

வாழ்க்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி ஜமீனின் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவர் கி.சு.வி.இலட்சுமி அம்மாள். 322 கிராமங்கள் மேல் ஆட்சியுரிமை கொண்டிருந்தது மருங்காபுரி ஜமீன். 14 ஆலயங்களும் இவர்களின் ஆட்சியில் இருந்தன. 24 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. புலிக்குத்தி நாயக்கர் குடும்பம் என பெயர் பெற்றது. கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கருக்கு ஐந்து மனைவிகள். ருக்மிணி, முத்தழகு, வெள்ளையம்மா, பொன்னழகு, லட்சுமி.

1894-ல் பிறந்த இலட்சுமி அம்மாள் மருங்காபுரி ஜமீனின் ஐந்தாவது அரசி. அவருக்கு ஆண்டாள் என்னும் மகள் பிறந்தாள். மூத்த மனைவியரில் பொன்னழகுவுக்கு நீலாம்பாள் என்னும் மகள். மற்ற மனைவியருக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே லட்சுமி அம்மாள் தன் மகள் வழிப்பேரனாகிய சிவசண்முக பூச்சைய நாயக்கரை தனக்கு வாரிசாக தத்து எடுத்துக்கொண்டார். பொன்னழகு அம்மாள் தன் மகள் வழிப்பேரனாகிய குமார விஜய நாயக்கரை வாரிசாக தத்து எடுத்துக்கொண்டார். ஜமீன் உரிமைகள் மறைந்தபின் ஆலயநிர்வாக உரிமைகளும் உடைமைகளும் இரு வாரிசுகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.1971ல் மறைந்தார்

மருங்காபுரி ஜமீன் மாளிகை

இலக்கியப்பணி

கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர்

கி.சு.வி.இலட்சுமி அம்மையார் திருக்குறள் தீபாலங்காரம் என்னும் தலைப்பில் திருக்குறளுக்கு உரை எழுதினார். திருக்குறளுக்கான பழைய உரைகளில் மு.ரா.அருணாச்சலக் கவிராயர் மட்டுமே உரைநடையில் உரை வழங்கியிருப்பதாகவும் அது கடுமையான நடையில் இருந்தமையால் எளிமையாக ஓர் உரையை தான் எழுதியதாகவும் லட்சுமி அம்மாள் சொல்கிறார்.

பொதுப்பணி

கி.சு.வி.இலட்சுமி அம்மையார் திருச்சி ஜில்லா போர்டுக்கு நியமன உறுப்பினராகவும், மாவட்ட பாரதி சகோதர சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

உசாத்துணை

https://ntrichy.com/2020/06/27/she-was-the-first-woman-to-write-a-commentary-on-thirukkural-91-years-ago/