being created

ஜாம்பவான்

From Tamil Wiki
Revision as of 06:55, 1 June 2022 by Madhusaml (talk | contribs)

ஜாம்பவான் இராமாயணத்தில் கிஷ்கிந்தை நகரை ஆண்ட சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். இராவணன் உடனான போரில் ஜாம்பவான் இராமனுக்கு துணை நின்றான். ஜாம்பவான் வம்ச வழியில் வந்த ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி கிருஷ்ணனின் மனைவியருள் ஒருவர். ஜாம்பவான் விஷ்ணுவின் பத்து அவதாரத்திலும் துணைக் கதாப்பாத்திரமாக வருகிறான். ஜாம்பவ இனம் கரடி குலத்தவர்களாகவும், குரங்கு இனத்தவர்களாகவும் விஷ்ணு புராணங்களில் சித்தரிக்கப்படுகிறது.1

பிறப்பு

இராவணன் பூலோகத்தில் பல தொல்லைகளையும், அக்கிரமங்களையும் செய்து வந்தான். இராவணின் கொடுமைகளைத் தாங்க முடியாத பூமாதேவி அவனை தேவருலகிற்கு செல்லுமாறு கூறினாள். பூமாதேவியின் சொல் கேட்டு இராவணன் தேவருலகம் விரைந்தான். அங்கே தேவர்களுக்கு பல தொல்லைகள் செய்தான். இராவணனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் பிரம்மாவினிடம் ஓடினர். பிரம்மா விஷ்ணுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்.

பிரம்மா சொல்வதைக் கேட்ட விஷ்ணு, “பிரம்ம தேவரை அந்த இராவணனை அழிக்க நான் அயோத்தி ஆளும் தசரதரின் மகனாகப் பிறப்பேன். அந்த அவதாரம் எடுத்தது நான் இராவணனை அழிப்பேன்” என்றார். விஷ்ணுவின் சொல் கேட்டு பிரம்மா பிரம்ம லோகம் திரும்பினார். அங்கிருந்து விஷ்ணுவின் அவதாரத்திற்கு உதவ குரங்கு இனக்குழு ஒன்றை கிஷ்கிந்தையை தோற்றுவித்தார். கிஷ்கிந்தையில் ஜாம்பவான் மற்றும் பிற வானரப் படைகளை பிரம்மா உருவாக்கினார்.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.