being created

மையோடக் கோவனார்

From Tamil Wiki
Revision as of 16:54, 21 October 2024 by Ramya (talk | contribs)

மையோடக் கோவனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று பரிபாடலில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மையோடக் கோவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மையோடம் என்ற ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மையோடக் கோவனார் பாடிய பாடல் ஒன்று பரிபாடல் தொகுப்பில் 7-வது பாடலாக உள்ளது. 86 அடிகளைக் கொண்டது. பித்தாமத்தர் என்னும் இசைவாணர் இதற்கு பாலையாழ் என்னும் பண்ணிசைத்துப் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய் தோழியை, 'நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக' என்று கேட்டதற்கு அப்புனலணி இன்பமும், பல்வேறு வகைப்பட்ட இன்பமும், தலைமகன் காதன்மையும் கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்' என்றதாக பாடல் உள்ளது.
  • வையை வெள்ளம் பற்றிய உவமைகள்: வெள்ளம் பாண்டியன் படை போல வந்தது. பாண்டியன் மக்களுக்கு உதவுவது போல வெள்ளம் பயிர்களுக்கு உதவியது. ஆடத் தெரியாத பெண் ஆடுவது போல எங்கெங்கோ ஓடியது. ஊடல் தீராத ஒருத்தி கணவனைக் கடந்து ஓடுவது போல அணையை உடைத்துக்கொண்டு ஓடியது. ஊடல் தீர்க்கும் கணவன் போல ஆசைப்பெருக்கில் ஓடியது. பாண்டியன் பகைப்புலத்தில் கொள்ளையடிப்பது போல நீராடுவோரின் ஆடையணிகளைக் கவர்ந்து சென்றது.
  • வையை புனல் ஆடுதல்: நீராடிய மகளிர் ஒருவர்மீது ஒருவர் நீரை விசி அவர்களது கண்கள் சினத்தால் சிவந்ததால் வெள்ளத்தின் சிவப்புநிறம் கருமையாகக் காணப்பட்டது. தலைக்கோல் மகளிர் ஆட முழங்கிய இசை இடிமுழக்கம் போல இருந்தது.

பாடல் நடை

  • பித்தாமத்தர் இசை, பண்ணுப் பாலையாழ்

தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்

புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.