under review

மாங்குடி கிழார்

From Tamil Wiki

மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) சங்க காலப் புலவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன. மதுரைக் காஞ்சியை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் மாங்குடியில் பிறந்தார். மாங்குடி மருதனார் என்றும் அழைப்பர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றினார். மதுரைக் காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடினார்.

பாடிய பாடல்கள்
  • அகநானூறு (89)
  • குறுந்தொகை (164, 173, 302)
  • நற்றிணை (120, 123)
  • புறநானூறு (24, 26, 313, 335, 372, 396)
  • மதுரைக்காஞ்சி

பாடல் நடை

  • அகநானூறு: 89

வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

  • நற்றிணை: 120

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, 5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று,
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.